ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

முதல் சருக்கம்

ADVERTISEMENTS
மணியும்நல் கந்தமுத்தும் மலிந்த முக்குடை இலங்கஅணிமலர்ப்
பிண்டியின்கீழ் அமர்ந்த நேமீசர் பாதம்பணியவே வாணிபாதம் பண்ணவர் தமக்கும்
எந்தம்இணைகரம் சிரசில் கூப்பி இயல்புறத் தொழுதும் அன்றே.
ADVERTISEMENTS
செந்தளிர்ப் பிண்டியின்கீழ்ச் செழுமணி மண்டபத்துஉள் இந்திரன்
இனிதின் ஏத்தும் ஏந்துஅரிஆசனத்தின் அந்தமாய் அமர்ந்த கோவின்
அருள்புரிதீர்த்த காலம் கொந்தலராசன் நாக குமரன்நல் கதை விரிப்பாம்.
1
ADVERTISEMENTS
திங்கள் முந்நான்கு யோகம் தீவினை அரிய நிற்பரஅங்கபூ ஆதி நூலுள்
அரிப்புஅறத் தௌ¤ந்த நெஞ்சில்தங்கிய கருணை ஆர்ந்த தவமுனி அவர்கள்
சொன்னபொங்குநல் கவிக்கடல்தான் புகுந்துநீர்த்து எழுந்தது அன்றே.
2
புகைக்கொடி உள்உண்டு என்றே பொற்புநல் ஒளிவிளக்கைஇகழ்ச்சியின்
நீப்பார் இல்லை ஈண்டுநல் பொருள் உணர்ந்தோர்அகத்துஇனி மதியில் கொள்வார்
அரியரோ எனது சொல்லைச்செகத்தவர் உணர்ந்து கேட்கச் செப்புதல் பாலது ஆமே.
3
வெவ்வினை வெகுண்டு வாரா விக்கிநன்கு அடைக்கும்
வாய்கள்செவ்விதில் புணர்ந்து மிக்க செல்வத்தை ஆக்கும் முன்னம்கவ்விய
கருமம் எல்லாம் கணத்தினில் உதிர்ப்பை ஆக்கும்இவ்வகைத் தெரிவுறுப்பார்க்கு
இனிதுவைத்து உரைத்தும் அன்றே.
4
நாவலந் தீப நூற்றை நண் ணுதொண்ணூறு கூறில்ஆவதன் ஒருகூறு ஆகும்
அரியநல் பரத கண்டம்பாவலர் தகைமை மிக்கோர் பரம்பிய தரும பூமிமேவுமின்
முகில்சூழ் சோலை மிக்கதுஓர் மகதநாடு.
5
திசைகள் எங்கெங்கும் செய்யாள் செறிந்துஇனிது உறையும்
நாட்டுள்இசையுநல் பாரிசாத இனமலர்க் காவும் சூழ்ந்தஅசைவிலா அமர லோகத்து
அதுநிகரான மண்ணுள்இசைஉலா நகரம் மிக்க இராசமாகிரியம் ஆமே.
6
கிடங்குஅரு இஞ்சி ஓங்கிக் கிளர்முகில் சூடிச்
செம்பொன்கடங்கள்வைத்து இலங்கு மாடம் கதிர்மதி சூட்டினால்போல்படம்கிடந்த
அல்குலார்கள் பாடலோடு ஆடலாலேஇடம்கொண்ட இன்பம் உம்பர் இடத்தையும் மெச்சும்
அன்றே.
7
பாரித்த தன்மை முன்னம் பாலித்தற்கு ஐம்மடங்காம்பூரித்த
தார்கள் வேய்ந்த பொற்குடை எழுந்த மேகம்வாரித்து அசைந்து இளிக்கும்
வண்கைஅம்பொன்திண் தோளான்சீரித்தது அலங்கல் மார்பன் சிரேணிக ராசன்ஆமே.
8
ஆறில்ஒன்று இறைகொண்டு ஆளும் அரசன்மாதேவி அன்னப்பேறுடை நடைவேல்
கண்ணாள் பெறற்குஅரும் கற்பினாள்பேர்வீறுடைச் சாலினீதா மிடைதவழ் கொங்கை
கொண்டைநாறுடைத் தார்அணிந்த நகைமதி முகத்தினாளே.
9
மற்றும் எண்ணாயிரம்பேர் மன்னனுக்கு இனிய மாதர்வெற்றிவேல்
விழியினாரும் வேந்தனும் இனிய போகம்உற்றுஉடன் புணர்ந்து இன்பத்து உவகையுள்
அழுந்தி அங்குச்செற்றவர்ச் செகுத்துச் செங்கோல் செலவிய காலத்து அன்றே.
10
இஞ்சிசூழ் புரத்து மேற்பால் இலங்கிய விபுலம் என்னும்மஞ்சிசூழ்
மலையின் மீது வரவீரநாதர் வந்துஇஞ்சிமூன்று இலங்கும் பூமி ஏழிறை இருக்கை
வட்டம்அஞ்சிலம்பார்கள் ஆட அமரரும் சூழ்ந்த அன்றே.
11
வனமிகு அதிசயங்கள் வனபாலன் கண்டுவந்துநனைமது மலர்கள் ஏந்தி
நன்நகர் புகுந்துஇராசன்மனைஅது மதில்கடந்து மன்னனை வணங்கிச் செப்பமனமிக
மகிழ்ந்து இறைஞ்சி மாமுரசு அறைக என்றான்.
12
இடிமுரசு ஆர்ப்பக் கேட்டும் இயம்பிய அத்தினத்தின்படுமத யானை
தேர்மா வாள்நால் படையும் சூழக்கடிமலர் சாந்தும் ஏந்திக் காவலன்
தேவியோடும்கொடிநிரை பொன் எயிற்குக் குழுவுடன் சென்ற அன்றே.
13
பொன்எயில் குறுகிக் கைம்மாப் புரவலன் இழிந்துஉள்புக்குநன்நிலத்து
அதிசயங்கள் நரபதி தேவியர்க்குப்பன்உரை செய்து காட்டிப் பரமன்தன் கோயில்
தன்னைஇன்இயல் வலங்கொண்டு எய்தி ஈசனை இறைஞ்சினானே.
14
நிலமுறப் பணிந்து எழுந்து நிகர்இலஞ் சினையின் முற்றிக் கலன்அணி
செம்பொன் மார்பன் கால்பொரு கடலில் பொங்கி நலமுறு தோத்திரங்கள் நாதன்தன்
வதனம் நோக்கிப்பலமனம் இன்றி ஒன்றிப் பலதுதி செப்பல் உற்றான்.
15
பொறியொடு வல்வினைவென்ற புனிதன் நீயேபூநான்கு மலர்ப்பிண்டிப்
போதன் நீயேபுறவிதழ்சேர் மரைமலர்மேல் விரனால் விட்டுப்பொன்எயிலுள்
மன்னிய புங்கவனும் நீயேஅறவிபணி பணஅரங்கத்து அமர்ந்தாய் நீயேஐங்கணைவில்
மன்மதனை அகன்றாய் நீயேசெறிபுகழ்சேர் சித்திநகர் தன்னை ஆளும்சிரீவர்த்த
மானம்எனும் தீர்த்தன் நீயே.
16
கஞ்சமலர் திருமார்பில் தரித்தாய் நீயேகாலம்ஒரு மூன்றுஉணர்ந்த
கடவுள் நீயேபஞ்சாத்தி தான்உரைத்த பரமன் நீயேபரமநிலை ஒன்றுஎனவே
பணித்தாய் நீயேதுஞ்சாநல் உலகுதொழும் தூயன் நீயேதொல்வினை எல்லாம்எரித்த
துறவன் நீயேசெஞ்சொல் பாவையை நாவில் சேர்த்தாய் நீயேசிரீவர்த்தமான்
எனும் தீர்த்தன் நீயே.
17
அறவன்நீ அமலன்நீ ஆதி நீயேஆரியன்நீ சீரீயன்நீ அனந்தன்
நீயேதிரிலோக லோகமொடு தேயன் நீயேதேவாதி தேவன்எனும் தீர்த்தன்
நீயேஎரிமணிநல் பிறப்புடைய ஈசன் நீயேஇருநான்கு குணம்உடைய இறைவன்
நீயேதிரிபுவனம் தொழுதுஇறைஞ்சும் செல்வன் நீயேசிரீவர்த்த மானம்எனும்
தீர்த்தன் நீயே.
18
முனிவர்தமக்கு இறையான மூர்த்தி நீயேமூவா முதல்வன்எனும் முத்தன்
நீயேஇனிமை ஆனந்தசுகத்து இருந்தாய் நீயேஇயல்ஆறு பொருள்உரைத்த ஈசன்
நீயேமுனிவுமுதல் இல்லாத முனைவன் நீயேமுக்குடையின் கீழ்அமர்ந்த முதல்வன்
நீயேசெனித்துஇறக்கும் மூப்பு இறப்பும் தீர்த்தாய் நீயேசிரீவர்த்த
மானன்எனும் தீர்த்தன் நீயே.
19
நவபத நன்னயம்ஆறு நவின்றாய் நீயேநன்முனிவர் மனத்துஇசைந்த நாதன்
நீயேஉவமைஇலா ஐம்பதமும் உரைத்தாய் நீயேஉத்தமர்தம் இருதயத்துள் உகந்தாய்
நீயேபவமயமாம் இருவினையைப் பகர்ந்தாய் நீயேபரம நிலைஅமர்ந்த பரமன்
நீயேசிவமயமாய் நின்றதிகழ் தேசன் நீயேசிரீவர்த்தமானன்எனும் தீர்த்தன்
நீயே.
20
துதிகள் செய்துபின் தூய்மணி நன்நிலத்துஅதிகொள் சிந்தையின்
அம்பிறப் பணிந்து உடன்நெதி இரண்டுஎன நீடிய தோளினான்யதிகொள் பண்ணவர்
பாவலன் புக்கதே.
21
சிறந்து கோட்டத்துச் செல்வக கணதரர்இறைவன் நன்மொழி
இப்பொருள் உள்கொண்டுஅறைஅமர்ந்து உயிர்க்கு அறமழையைப்பெயும்துறவன் நற்சரண்
தூய்தின் இறைஞ்சினான்.
22
மற்றுஅம் மாமுனி ஏர்மல ராம்பதம்உற்றுடன்பணிந்து ஓங்கிய
மன்னவன்நற்றவர்க்கு இறையானநற் கௌதமர்வெற்றி நற்சரண் வேந்தன்
இறைஞ்சினான்.
23
இருகரத்தின் இறைஞ்சிய மன்னனும்பொருகயல்கணிப் பூங்குழை
மாதரும்தரும தத்துவம் சனமுனிவர்க்குஉரைஇருவரும்இயைந்து இன்புறக் கேட்டபின்.
24
சிரிநல் பஞ்சமி செல்வக் கதையினைசெறிகழல் மன்னன் செப்புக
என்றலும்அறிவு காட்சி அமர்ந்துஒழுக் கத்துஅவர்குறிஉ ணர்ந்துஅதன் கூறுதல்
உற்றதே.
25
நாவலந் தீவின் நற்பரதத்துஇடைமாவலர் மன்னர் மன்னு
மகதம்நல்கூவும் கோகிலம் கொண்மதுத் தாரணிகாவும் சூழ்ந்த கனக புரம்அதே.
26
அந்நகர்க்கு இறையான சயந்தரன்நன்மனைவி விசாலநன்
நேத்திரைதன்சுதன்மதுத் தாரணி சீதரன்நன்கு அமைச்சன் நயந்தரன் என்பவே.
27
மற்றும் தேவியர் மன்னும்எண்ணாயிரர்வெற்றி வேந்தன்
விழைந்துஉறுகின்றநாள்பற்ற வாணிகன் பல்பொருள் பொற்கலத்துஉற்றமாதர் படத்து
உருக்காட்டினான்.
28
மன்னன் நோக்கி மயங்கி மகிழ்ந்தபின்கின்னரியோ கிளர்கார்
மாதரோஇன்ன ரூபம்மிக்கார்இது என்றலும்மன்னும் வாசவன் வாக்குஉரை
செய்கின்றான்.
29
சொல்அரிய சுராட்டிர தேசத்துப்பல்சனம்நிறை
பரங்கிரியாநகர்செல்வன் சிரீவர்மன் தேவியும் சிரீமதிநல்சுதையவள் நாமம்
பிரிதிதேவி.
30
அவ்வணிகன் அவளுடை ரூபத்தைச்செவ்விதில் செப்பச் சீருடை
மன்னனும்மௌவல் அம்குழல் மாதரைத் தான்அழைத்துத்தெய்வ வேள்வியில் சேர்ந்து
புணர்ந்தனன்.
31
மன்னன் இன்புற்று மாதேவி ஆகவேநன்மைப் பட்டம் நயந்து
கொடுத்தபின்மன்னும் மாதர்கள் வந்து பணிந்திடஇன்ன ஆற்றின் இயைந்துடன்
செல்லுநாள்.
32
வயந்தம் ஆடவே மன்னனும் மாதரும்நயந்து போந்தனர் நன்மலர்க்
காவினுள்பெயர்ந்து பல்லக்கின் ஏறிப் பிரிதிதேவிகயந்தம் நீர்அணி
காண்டற்குச் சென்றநாள்.
33
வாரணத்தின்முன் மார்க்கத்து நின்றவள்வார்அணி கொங்கை
யார்அவள் என்றலும்ஏர்அணிம்முடி வேந்தன்மாதேவிஎன்றுதார்அணிகுழல் தாதி
உரைத்தனள்.
34
வேல்விழி மாது கேட்டு விசாலநேத்திரையோ என்னைக்கால்மிசை வீழ
எண்ணிக் காண்டற்கு நின்றாள் என்றுபால்மொழி அமிர்தம் அன்னாள் பரமன் ஆலையம்
அடைந்துநூல்மொழி இறைவன் பாதம் நோக்கிநன்கு இறைஞ்சினாளே.
35
கொல்லாத நல்விரதக் கோமான்நினைத் தொழுதார்பொல்லாக்
கதிஅறுத்துப் பொற்புடைய முத்திதனைச்செல்லற்கு எளிதென்றே சேயிழையாள்
தான்பரவிஎல்லா வினைசெறிக்கும் இயன்முனியைத் தான்பணித்தாள்.
36
பணிபவள்கு நன்குஉரையில் பரமமுனி வாழ்த்தஅணிபெறவே நல்தவமும்
ஆமோ எனக்குஎன்றாள்கணிதம்இலாக் குணச்சுதனைக்
கீர்த்திஉடனேபெறுவைமணிவிளக்கமே போன்ற மாதவனும் தான்உரைத்தான்,
37
நின்றசனம் தன்னுடனே நீடுபோய்த் தவம்பட்டுப்பின்றை அறஉரைகள்
பெருமிதமாய்க் கேட்டுவிதிவென்ற பரமன்அடி விமலமாய்த் தான்பணிந்துஅன்றுதான்
புத்திரனை அவதரித்தால் போல்மகிழ்ந்தாள்.
38
நல்தவன் உரைத்த சொல்லை நறுமலர்க் கோதை கேட்டுபற்றுடன்
உணர்ந்து நல்ல பாசுஇழைப் பரவை அல்குல்உற்றதன் குழலினாரோடு உறுதவன் பாதம்
தன்னில்வெற்றியின் இறைஞ்சி வந்து வியன்மனை புகுந்து இருந்தாள்.
39




இதன் ஆசிரியரும் ஒரு சமணப் பெண்துறவியே. பெயர் அறியக் கிடைக்கவில்லை. 5 சருக்கங்களில் 170 விருத்தப்பாக்களில் நாகபஞ்சமியின் கதையை உரைக்கும் சிறுகாப்பியமாகும் இது. முழுக்க முழுக்க மணத்தையும் போகத்தையும் மட்டுமே பேசுகிறது. 519 பெண்களைக் கதையின் நாயகன் மணக்கிறான். காவிய நயமோ அமைதியோ சிறிதும் இல்லாத நூல் இது. காலம் கி.பி.16-ஆம் நூற்றாண்டு.


அழிந்து போன நூல் என்று கருதப்பட்ட இதனை சமண அறிஞர் ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களின் உதவியால் மு.சண்முகம் பிள்ளை பதிப்பித்துள்ளார்.


காப்பு