ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

ஐந்தாம் சருக்கம்

ADVERTISEMENTS
நாவலந் தீவு தன்னுள் நன்குஅயிராவதத்தின்மேவுமின் முகில்சூழ் மாட
வீதசோகப்புரத்துக்காவிநன் விழிமாதர்க்குக் காமன்விக்கிரமராசன்தாவில்
சீர் வணிகன் நாமம் தனதத்தன் என்பது ஆமே.
145
ADVERTISEMENTS
மனைவிதன் தனதத்தைக்கு மகன்நாகதத்தன் ஆகும்வனைமலர் மாலை
வேலான் மற்றுஒரு வணிகன் தேவிப்புனைமலர்க் கோதை நல்லாள் பொற்புடை
வசுமதிக்குமனையின்நன்மகள்தன் நாமம் இயன்நாகவசுஎன் பாள்இம்.
146
ADVERTISEMENTS
நண்புறு நாகதத்தன் நாகநல்வசுஎன்பாளைஅன்புறு வேள்வி தன்னால்
அவளுடன் புணர்ந்து சென்றான்பண்புறு நல்தவத்தின் பரமுனி தத்த நாமர்இன்புறும்
புறத்தின் வந்தார் இறைவன் ஆலையத்தின் உள்ளே.
147
நாகதத்தன்சென்று அந்த நன்முனி சரண்அடைந்துவாகுநல் தருமம் கேட்டு
அனசன நோன்பு கொண்டான்போகபுண்ணியங்கள் ஆக்கும் பூரண பஞ்சமீயில்ஏகநல்
தினத்தின் நன்று இடர்பசி ஆயிற்று அன்றே.
148
தருமநல் தியானம் தன்னால் தன்னுடை மேனி விட்டுமருவினான் அசோத
மத்தின் வானவன் ஆகித் தோன்றிவருகயல் விழியாள் நாக வசுவும்வந்து
அமரனுக்குமருவிய தேவி ஆகி மயல்உறுகின்ற அன்றே.
149
அங்குஐந்து பல்ல மாயு அமரனாய்ச் சுகித்து விட்டுஇங்குவந்து அரசன்
ஆனாய் இனிஅந்தத் தேவி வந்துதங்குநின் மனைவி ஆனாள் தவமுனி உரைப்பப்
பின்னும்எங்களுக்கு அந்த நோன்பு இனிதுவைத்து அருள என்றான்.
150
திங்கள் கார்த்திகையில் ஆதல் சேர்ந்தபங்குனியில்
ஆதல்பொங்குஅனல் ஆடி ஆதல் பூரண பக்கம் தன்னில்அங்குறு பஞ்சமியின் அனசன
நோன்பு கொண்டுதங்கும்ஆண்டு ஐந்து நோற்றான் தான்ஐந்து திங்கள் அன்றே.
151
இந்தநல் கிரமம் தன்னில் இனிமையின் நோன்பு நோற்றுஅந்தம்இல்
அருகர் பூசை அருள்முனி தானம் செய்தால்இந்திர பதமும் பெற்று இங்குவந்து அரசர்
ஆகிப்பந்ததீவீனையை வென்று பஞ்சமகதியும் ஆமே.
152
என்றுஅவர்உரைப்பக் கேட்டு இறைஞ்சிக் கைக்கொண்டு
நோன்பைசென்றுதன் பவனம் புக்கான் சேயிழையோடு மன்னன்நன்றுடன் செல்லும்
நாளுள் நயந்தரன் வந்துஇறைஞ்சிஉன்னுடைத் தந்தை உன்னை உடன் கொண்டு வருக
என்றான்.
153
அமையும்நன்கு அமைச்சன் சொல்லை அருமணி மார்பன்
கேட்டுசமையும்நால் படையும் சூழச் சாலலக் கணையினோடும்இமையம்போல்
களிற்றின்ஏறி இனியநல் தோழன் மாரும்இமையவர்க்கு இறைவன் போல எழில்பெறப்
புக்க அன்றே.
154
தாதைஎதிர் கொள்ளஅவன் தாழ்ந்துஅடி பணிந்தான்ஆதரவினன் நன்மகனை
அன்புற எடுத்தும்போதமிகப் புல்லியபின் போந்தனர் மனைக்கேஏதம்இல்சீர்
இன்புற இனிதுடன் இருந்தார்.
155
வெற்றியுடன் வேள்விசெய்த வேல்விழியினாரைஉற்றுஉடனே மாதரை
ஒருங்குஅழைக்க வந்தார்சித்திரநல் பாவையரைச் சேர்ந்துஉடன்
இருந்தான்பற்றுஅறச் செயந்¢தரனும் பார்மகன்மேல் வைத்தான்.
156
நாககுமரன்தனக்கு நன்மகுடம் சூட்டிப்போகஉப போகம்விட்டுப்
புரவலனும் போகியாகமன் அடைக்குமுனியவர் அடிபணிந்துஏகமனம் ஆகியவன் இறைவன்
உருக்கொண்டான்.
157
இருவினை கெடுத்தவனும் இன்பஉலகு அடைந்தான்பிரிதிவிநல்
தேவியும்தன் பெருமகனை விட்டுசிரிமதி எனும்துறவி சீர்அடி பணிந்துஅரியதவம்
தரித்துஅவளும் அச்சுதம் அடைந்தாள்.
158
வேந்தன்அர்த்த ராச்சியம் வியாளனுக்கு அளித்தான்ஆய்ந்தபல
தோழர்களுக்கு அவனிகள் அளித்துக்சேர்ந்ததன் மனைவியருள்
செயலக்கணைதன்னைவாய்ந்த மகாதேவிபட்டம் வன்மைபெற வைத்தான்.
159
இலக்கணையார் தன்வயிற்றில் நல்சுதன் பிறந்தான்மிக்கவன்தன்
நாமமும் மிகுதேவகுமாரன்தொக்ககலை சிலைஅயில் பயின்றுமிகு தொல்தேர்ஒக்கமிக்
களிறுஉடனே ஊர்ந்துதினம் சென்றான்.
160
புரிசைஎழ நிலத்தின்மிசை பொற்புஉற விளங்கும்அரியஅரியாசனத்தில்
அண்ணல் மிகஏறிஎரிபொன்முடி மன்னர்கள் எண்ஆயிரவர் சூழஇருகவரிவீசஇனி
எழில்பெற இருந்தான்.
161
அரசுஇனிது இயல்பினின் அமர்ந்துஇருக்கும் அளவில்பரவுமுகில்
மாய்ந்திடப் பார்த்திபன் விரத்திவிரவிமிகு குமரன்மிசை வீறுமுடி
சூட்டிஅரியதவம் தாங்கஅவன் அன்புடன் எழுந்தான்.
162
அமலமதி கேவலியின் அடிஇணை வணங்கிவிமலன்உருக் கொண்டனன்நல்
வேந்தர்பலர் கூடகமலமலராள் நிகர்நல் காட்சிஇலக்கணையும்துமிலமனைப்
பதுமைஎனும் துறவர்அடிபணிந்தாள்.
163
நறுங்குழல் இலக்கணையும் நங்கைமார்தம் கூடஉறுதவம் தரித்துக்¢
கொண்டு உவந்துஅவர் செல்லும் நாளுள்மறுவில்சீர் முனிவன் ஆய நாககுமாரன்
தானும்இறுகுவெவ் வினைகள் வென்று இனிச்சித்தி சேர்ந்தது அன்றே.
164
வியாள மாவியாளர் தாமும் விழுத்தவத்து அனயை என்னும்நயாஉயிர்
தியானம் தன்னால் நால்இரு வினைகள் வென்றுசெயத்துதி தேவர் கூறிச் சிறந்த
பூசனையும் செய்யமயாஇறப் பிறப்பும் இன்றி மருவினார் முத்தி அன்றே.
165
அருந்தவ யோகம் தன்னால் லச்சேத் தியபேத் தியர்தம்இருவினை
தம்மை வென்று இன்புறும் சித்தி சேர்ந்தார்மருவுநல் தவத்தி னாலே மற்றும்
உள்ளோர்கள் எல்லாம்திருநிறைச் சோதம் ஆதி சேர்ந்துஇன்பம் துய்த்தார் அன்றே.
166
நாகநல் குமரன்கு ஆயு நான்குஆண்டு ஐஞ்நூற்று இரட்டிஆகுநல் குமார காலம்
ஐந்து முப்பத்து இரட்டிபோகபூமிஆண்ட பொருவில் எண்நூறு ஆண்டுஆருநல் தவத்தில்
ஆண்டு அறுபத்து நான்குஅது ஆமே.
167
மறுஅறு மனையவர்க்கும் மாதவர் தமக்கும் ஈந்தபெறும்இரு நிலங்கள்
எங்கும் பெயர்ந்து நல்கேவலியாய்அறமழை பொழிந்த காலம் அறுபத்து ஆறாண்டு
சென்றார்உறுதவர் தேவர் நான்கும் உற்றுஎழு குழாத்தி னோடே.
168
இதன்கதை எழுதி ஓதி இன்புறக் கேட்பவர்க்கும்புதல்வர்நல் பொருளும்
பெற்றுப் புரந்தரன் போல வாழ்ந்துகதம்உறு கவலை நீங்கிக் காட்சிநல் அறிவு
முன்பாய்ப்பதமிகும் அமர யோகம் பாங்குடன் செல்வர் அன்றே.
169
அறம்இன்றிப் பின்னை ஒன்றும் உயிர்க்குஅரண்
இல்லைஎன்றும்மறம்இன்றி உயிர்க்கு இடர்செய் மற்றுஒன்றும் இல்லை
என்றும்திறம்இது உணர்ந்து தேறித் தீக்கதிப் பிறவிக்கு அஞ்சிமறம்இதை விட்டு
அறத்தில் வாழுமின் உலகத் தீரே.
170




ஐந்தாம் சருக்கம்
நாககுமாரனின் முந்திய பிறப்பு வரலாறு